கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 18 பேரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் காவல்துறையினர் லாட்டரி, சூதாட்டம், மணல் திருட்டு, கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனை உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று ஒரே நாளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 18 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.அவர்களிடம் இருந்து ரூ.7740 மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.