Regional03

அழகு முத்துக்கோன் விழாவுக்கு செல்ல தடை :

செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் நடைபெறும் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள் விழாவுக்கு, கரோனா பரவல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து யாரும் செல்ல வேண்டாம் என காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கட்டாலங்குளத்தில் வரும் 11-ம்தேதி வீரன் அழகு முத்துக்கோனின் 311-வது பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது.

தற்போது கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மக்கள் கூட்டமாகத் திரள தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளையொட்டி பொதுமக்கள் கூட்டங்களை நடத்தவோ, ஊர் வலங்கள் செல்லவோ, இருசக்கர வாகனங்களில் பேரணி நடத்தவோ அனுமதியில்லை. அரசு சார்பில் மட்டும் மரியாதை செலுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் யாரும் இவ்விழாவில் கலந்துகொள்ள செல்ல வேண்டாம். இவ்வாறு அவரது செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT