Regional03

மன்னார்குடி பேருந்து நிலையத்தில் திருவாரூர் ஆட்சியர் ஆய்வு :

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

ஊரடங்கில் சில தளர்வுகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்கின்ற வகையில், இந்த ஆய்வை அவர் மேற்கொண்டார். அப்போது, சமூக இடைவெளியைப் பின்பற்றியும், தமிழக அரசு கூறும் அறிவுரைகளை கடைபிடித்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்பதை அவர் ஆய்வு செய்தார். மேலும், கரோனா தொற்று காலம் என்பதைக் கருத்தில்கொண்டு, மக்களுக்கு உணவுப் பொருட்களை பாதுகாப்பாகவும், சுகாதாரமான முறையிலும் வைத்து விற்பனை செய்ய வேண்டும் எனவும், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் வணிகர்களிடம் அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT