தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத் தில் இருந்த 3 விசைப்படகுகள் தருவை குளத்துக்கு மாற்றப் பட்டன. அவை இழுவலையை பயன்படுத்தக்கூடாது என்று தூத்துக்குடி மீனவர்கள் கூறினர். இதுதொடர்பாக, இரு தரப்பு மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழக மீன்வளத்துறை ஆணையர் கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், ஏடிஜிபி தாமரைக்கண்ணன், தென்மண்டல ஐஜி அன்பு, நெல்லை டிஐஜி பிரவின்குமார் அபிநபு, தூத்துக்குடி எஸ்பி எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இருதரப்பு மீனவர்களும் கலந்து கொண்டனர். இதில், மீனவர்கள் அவகாசம் கேட்டிருப்பதாகவும், முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.