சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வாழப்பாடியில் 36 மிமீ மழை பதிவானது.
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சாரல் மழை தொடங்கி பின்னர் கனமழையாக நள்ளிரவு வரை நீடித்தது. இதனால், நகரின் தாழ்வான சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: சேலம் 14.3, வாழப்பாடி 36, ஆணைமடுவு 20, கரியக்கோவில் 18, பெத்தநாயக்கன்பாளையம் 27, கெங்கவல்லி 8, ஏற்காடு 3, எடப்பாடி 4, மேட்டூர் 1.6, வீரகனூர் 26, ஓமலூர் 16 ஆத்தூர் 3 மிமீ மழை பதிவானது.