நெய்வேலியில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தங்கி இருந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் வீட்டின் முன்பக்க இரும்புக் கதவு சேதமடைந்துள்ளது. 
Regional01

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு :

செய்திப்பிரிவு

நெய்வேலி வட்டம் 21-ல் வசிப்பவர் ஜெயபால். இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில், வீட்டின் முன்பக்க இரும்புக் கதவு சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன், தெர்மல் காவல் ஆய்வாளர் லதா மற்றும் போலீஸார் ஜெயபால் வீட்டிற்குச் சென்று நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில், நெய்வேலி வட்டம் 21 பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் சிவா என்பவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜெயபாலின் நண்பர் வெங்கடேசன் உள்பட 4 பேர் கொலை செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தவெங்கடேசன், ஜெயபால் வீட்டில் தங்கியுள்ளார். ஜெயபாலுடன், வெங்கடேசன் நேற்று முன்தினம் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனை பார்த்த வீரமணி ஆத்திரமடைந்தார். வீரமணி நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில்நேற்றுமுன்தினம் ஜெயபால் வீட்டுக்கு சென்று நாட்டு வெடிகுண்டை வீசியது தெரியவந்தது.

இதுதொடர்பாக நெய்வேலி வட்டம் 21-வது பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(22), பிளேட் என்ற ரமேஷ்(37), தமிழரசன்(24), எழிலரசன்(22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் வீரமணி, சத்தியமூர்த்தி, சுதாகர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT