Regional01

இலவச தையல் இயந்திரம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கணவரை இழந்தவர், கணவரால் கைவிடப்பட்டவர்,உடல் ஊனமுற் றோர் மற்றும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப் படவுள்ளன.

இத்திட்டத்தில் 20 முதல் 40 வயது வரையிலான பெண்கள் பயன்பெற தகுதியானவர்கள். தையல் கற்றதற்கான சான்று மற்றும் பாஸ்போர்ட் புகைப்படத் துடன் விழுப்புரம் ஆட்சி யர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அலுவலக அறை எண்-26-ல் நேரில் சென்று விண்ணப்பித்து பயனடையலாம்.

கல்வராயன் மலை பழங்குடி யின மக்களுக்கு 30 கறவை மாடுகள், 2 சோலார் பவர் பம்ப், 50 தையல் இயந்திரங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு மூலிகை பண்ணை அமைப்பதற்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது. பயன்பெற விரும்பும் பழங்குடியினர் புகைப் படம், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்பஅட்டை நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து, அலைபேசி எண் மற்றும் சரியான முகவரியைகுறிப்பிட்டு, ‘திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி- 606202’ என்ற முகவரிக்கு விண் ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT