பண்ருட்டி அருகே வேளாண் துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு எம்எல்ஏ சபா ராஜேந்திரன் டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்களை வழங்கினார். 
Regional02

திருவாமூரில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி : சபா ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

செய்திப்பிரிவு

பண்ருட்டி அருகே திருவாமூர் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு டிராக்டர், கதிரடிக்கும் இயந்திரங்கள், களை எடுக்கும்இயந்திரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்)கென்னடி ஜபக்குமார் தலைமை தாங்கினார். பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சபா பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், வேளாண் உதவி இயக்குநர் விஜயா, மாவட்ட கவுன்சிலர் நிர்மலா ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன் கலந்துகொண்டு திருவாமூர், மாளிகம்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வேளாண் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ. 12 லட்சம் மதிப்பிலான விவசாய இயந்திரங்களை வழங்கினார். பின்னர் அங்கிருந்த கண்காட்சியை பார்வையிட்டார். ஒன்றிய கவுன்சிலர் யுவராணி ஜெகஜீவன்ராம், திமுக ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ,உழவர் உற்பத்தியாளர் குழுவின் செயலாளர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT