சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழித்திறன் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. 
Regional02

சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை பள்ளியில் - தேசிய வருவாய் வழித்திறன் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு :

செய்திப்பிரிவு

சேத்தியாத்தோப்பு அருகே வாழைகொல்லை நடுநிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழித்திறன் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கிராமத்தின் சார்பில் பாராட்டப்பட்டனர்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாழைக்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 13 பேர் தேசிய வருவாய் வழித்திறன் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிராமத்தின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயந்தி குறளரசன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் குமார்,மோகன், அரிமா சங்க மாவட்ட தலைவர் மணிமாறன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்

புகழேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பராஜ் வரவேற்று பேசினார்.மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு தேசிய வருவாய் வழித்திறன் தேர்வில் வெற்றிப் பெற்ற 13 மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். ஆசிரியர் சிவனேசன் அறியல்துறையை சார்ந்த புத்தகங்களை மாண வர்களுக்கு வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் கருணாகரன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT