திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனாவுக்கு நேற்று ஒரேநாளில் 6 பேர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 25 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 27 பேருக்கும் கரோனாபாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் 24 பேர்குணமடைந்தனர். 288 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். 3 பேர் உயிரிழந்தனர். தென்காசியில் 34 பேர் குணமடைந்தனர். 242 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். 3 பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 33பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், 19 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிரிழப்பு ஏதுமில்லை.
தென்காசியில் 34 பேர் குணமடைந்தனர். 242 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். 3 பேர் உயிரிழந்தனர்.