பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை சந்திப்பில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராககையெழுத்து இயக்கத்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநகரத் தலைவர் அலெக்ஸ், மாநிலபொதுச்செயலாளர் பினுலால் சிங், நிர்வாகிகள் வைகுண்டதாஸ், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி
முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ் கோடி ஆதித்தன் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற 2 தொண்டர்கள் மொட்டை அடித்துக்கொண்டனர். கட்சி நிர்வாகிகள் ராஜேஷ்முருகன், வான மாமலை, சொக்கலிங்ககுமார உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
வர்த்தக காங்கிரஸ் தலைவர் ராஜா,மாவட்ட துணைத் தலைவர் வீரப்பெருமாள்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கயத்தாறில் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி