திருச்சி கே.கே. நகர், உஸ்மான் அலி நகரைச் சேர்ந்த சிவசாமி மகன் சாமி ரவி(42). திருச்சி கே.கே.நகர் காவல் சரகத்தில் ஒருவரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், பேட்டைவாய்த்தலையில் அரசியல் கட்சியினரின் பணத்தை கொள்ளையடிக்க மூளையாக செயல்பட்டுள்ளார். இதையடுத்து, கே.கே. நகர் காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரையின்பேரில், மாநகர காவல் ஆணையர் அருண், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாமி ரவியை கைது செய்து நேற்று உத்தரவிட்டார்.