பாளையங்கோட்டை வட்டம் கீழநத்தம் கிராம நிர்வாக அலுவலகத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம், வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகளின் ஆவணங்கள் சேகரிக்கும் முகாம் நடைபெற்றது.
பல்வேறு சூழ்நிலைகளில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் குடியிருந்து வருவோருக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 876 வீடுகள் கட்டப்படவுள்ளது. இதற்கான பயனாளிகள் தேர்வு வெள்ளக்கோயில், குருந்துடையார்புரம், கருப்பந் துறை,மேற்கு கொக்கிரகுளம், மீனாட்சிபுரம் (அண்ணா நகர் பகுதி), புனைவேங்கப்பகுளம், கிருஷ்ணப்பேரி, நயினார்குளம், பிள்ளைகுளம், கக்கன்நகர், வி.எம்.சத்திரம்,கீழநத்தம், மணி மூர்த்தீஸ்வரம் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது.
முதல் கட்டமாக, பாளையங் கோட்டை வட்டம், கீழநத்தம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பயனாளிகளின் ஆவணங்கள் சேகரிப்பு முகாம் நடைபெற்றது. 57 பயனாளி களிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து பேட்டை எம்.ஜி.ஆர். பகுதி கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்று முகாம் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை குடிசை மாற்று வாரிய சமுதாய வளர்ச்சி அலு வலர் வி.மஞ்சு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.