வெப்பச்சலனம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி சராசரியாக 21.42 மி.மீ., மழை பெய்துள்ளது. இதில், அதிகபட்ச மாக கலசப்பாக்கம் பகுதியில் 125 மி.மீ., மழை பெய்ததால் தாழ்வானப் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. மேலும், செங்கம் பகுதியில் 37.4 மி.மீ., ஆரணியில் 2, செய்யாறில் 5, ஜமுனாமரத்தூரில் 5, வந்தவாசியில் 53, போளூரில் 29.6 மி.மீ., மழை பெய்துள்ளது.