வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். அருகில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், உதவி இயக்குநர் (பயிற்சி) விஷ்ணுபிரியா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன். 
Regional01

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் :

செய்திப்பிரிவு

மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் முன்னிலை வகித்தார். வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 18 வயதுக்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளிகள் 58 பேர் கலந்து கொண்டனர்.

அவர்கள் வழங்கிய மனுக்கள் மீது ஆய்வு நடத்தப்பட்டு, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித் தார். மேலும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து அவர் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், தகுதியுள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

SCROLL FOR NEXT