Regional02

கரோனா தொற்று குறைந்துள்ளதால் - உழவர் சந்தைகளைத் திறக்க கோரிக்கை :

செய்திப்பிரிவு

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உழவர்சந்தைகளைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டுள்ளன. இதனால், இங்கு நேரடியாக காய்கறி, பழங்களை விற்பனை செய்து வந்த விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த வாரச்சந்தைகள், உழவர் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களது காய்கறி, பழங்களை இடைத்தரகர்கள் மூலம் குறைந்த விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கரோனா தாக்கம் குறைந்துள்ளதோடு, ஊடரங்கிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி, வாரச்சந்தைகள் மற்றும் உழவர்சந்தைகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், ஆடு, மாடுகளை விற்பனை செய்யும் வகையில், கால்நடைச்சந்தையைத் திறக் கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT