சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் இருந்து இறங்கும் போது, நடை மேடைக்கும், ரயில் பெட்டிக்கும் இடையில் தவறி விழுந்த இளைஞர் சிவன்குமார் மற்றும் அவரை மீட்ட பெண் காவலர்கள் மஞ்சு, அஸ்வனி உள்ளிட்டோர். 
Regional02

நடைமேடைக்கும், ரயில் பெட்டிக்கும் இடையில் சிக்கிய - பிஹார் இளைஞரை மீட்ட பெண் காவலர்களுக்கு பாராட்டு :

செய்திப்பிரிவு

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புறப்பட்ட ரயிலில் இருந்து இறங்கியபோது, தவறி விழுந்து நடைமேடைக்கும், ரயில் பெட்டிக்கும் இடையில் சிக்கிய இளைஞரை துரிதமாக செயல்பட்டு இரு பெண் காவலர்கள் மீட்டனர். அவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பிஹார் மாநிலம் ஹாட்டியாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிவன்குமார் (20) என்பவர் தனது நண்பர்களுடன் வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.31 மணியளவில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தது.அப்போது, சேலத்தில் இறங்க வேண்டிய சிவன்குமார் இறங்காமல் ரயில் புறப்பட்டபோது, ரயிலில் இருந்து இறங்கினார். அப்போது, அவர் தவறி ரயில் பெட்டிக்கும், நடைமேடைக்கும் இடையில் விழுந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலர்கள் மஞ்சு, அஸ்வனி ஆகியோர் துரிதமாக செயல்பட்டு சிவன்குமாரை இழுத்து மீட்டனர்.

இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, இளைஞரை மீட்ட பெண் காவலர் இருவரையும், ரயில்வே பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் பாராட்டினர்.

SCROLL FOR NEXT