Regional02

முகக் கவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம் :

செய்திப்பிரிவு

சேலத்தில் 17 இடங்களில் பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர் விஷ்ணுவர்த்தினி தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் மல்லூர் பகுதியில் அவ்வழியாக வந்த பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, முகக் கவசம் அணியாமல் இருந்த பயணி களுக்கு அபராதம் விதித்தனர். இதேபோல, சேலம் வட்டத்துக்கு உட்பட்ட 17 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

SCROLL FOR NEXT