Regional01

ரூ.4,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தை அடுத்த கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்ஜோதி (35). இவர், தனது உறவினர் இறந்த நிலையில், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்துவை(51) அணுகினார். அப்போது, மாரிமுத்து ரூ.4,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் அருள்ஜோதி புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, சாத்தம்பாடியில் உள்ள மாரிமுத்துவின் வீட்டில், அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அருள்ஜோதி நேற்று வழங்கினார். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீஸார், மாரிமுத்துவை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT