Regional02

கரூர் மாவட்டத்தில் இன்று முதல் உழவர் சந்தைகள் செயல்படும் :

செய்திப்பிரிவு

கரோனா பரவல் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் கரூர் மாவட்டத்தில் கரூர், வெங்கமேடு, வேலாயுதம்பாளையம், பள்ளபட்டி, குளித்தலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த உழவர் சந்தைகள் இன்று (ஜூலை 8) முதல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திறக்கப்படுகிறது.

உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை முறையாக கடைபிடிக்கவேண்டும் என ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT