Regional01

நெல்லை - தென்காசி 4 வழிச்சாலையில் - மாறாந்தையில் சுங்கச்சாவடி : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி நான்கு வழிச்சாலை திட்டப் பணிகள் நடைபெற்று வருகி ன்றன. தென்காசி மாவட்டம் ஆவுடையானூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாரியப்பன், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சில கேள்விகளை நெடுஞ்சாலை துறையிடம் கேட்டிருந்தார்.

அதற்கு கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் அளித்த விவரங்கள்: திருநெல்வேலி- தென்காசி நான்கு வழிச்சாலை திட்டமானது ரூ.430.71 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் செயல்படுத்தப்படுகிறது. நான்கு வழிச்சாலை திட்டத்தில் மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைக்கப்படுகிறது.

கிராமப்பகுதிகளில் 35 மீட்டர் அகலத்திலும், நகரப் பகுதிகளில் 25 முதல் 28 மீட்டர் அகலத்திலும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிறிய பாலங்கள் 79 இடங்களிலும், பெரிய பாலங்கள் ஆலங்குளம் மற்றும் பாவூர்சத்திரம் ரயில்வே கேட் என, இரண்டு இடங்களிலும் அமைக்கப்படுகின்றன. சாலை பணிகள் முடிவடைந்த தேதி யிலிருந்து 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்ததாரர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நான்கு வழிச் சாலையின் மொத்த நீளமான 45.6 கி மீட்டர் தொலைவுக்கு சாலையின் இருபுறமும் மரங்கள் நடப்பட உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT