Regional02

அரசுப் பேருந்து மீது : கல் வீசிய 4 பேர் கைது :

செய்திப்பிரிவு

காங்கயம் அருகே மது போதையில் அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை, ஊதியூர் போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாநகர் காந்திபுரத்தில் இருந்து காங்கயம் வழியாக கரூருக்கு நேற்று முன்தினம் மாலை அரசுப் பேருந்து சென்றுள்ளது. கோவையை சேர்ந்த ஆனந்த் பாபு என்பவர் ஓட்டியுள்ளார். காங்கயத்தை அடுத்த சம்பந்தம்பாளையம் அருகே, குடிபோதையில் இருந்த 4 பேர் பேருந்து மீது கற்களை வீசியுள்ளனர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்துள்ளது.

இதுகுறித்த அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து மதுரையை சேர்ந்த பூபதி (27), விருதுநகரை சேர்ந்த அப்துல்காதர் (22), சிவகங்கையை சேர்ந்த பவுன்ராஜ் (29), நன்னிலத்தை சேர்ந்த மதன் (24) ஆகிய 4 பேரை, ஊதியூர் போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், காடையூர் அருகே தனியார் மில்லில் 4 பேரும் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், மது போதையில் அரசுப் பேருந்தை நிறுத்த முயற்சித்துள்ளனர். பேருந்து நிற்காமல் சென்றதால், கல்வீசி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

SCROLL FOR NEXT