Regional01

ஆன்லைனில் சூதாட்டம் இருவர் கைது :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் இணையதளம் மூலமாக குதிரைப்பந்தய விளையாட்டிற்கு பணம் கட்டி சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த நளின்குமார் (28), உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சிவசங்கர் (39) ஆகியோர் ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து மடிக்கணினி, செல்போன் பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர்களது வங்கிக்கணக்கு விவரம், பரிவர்த்தனைகள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மீது தமிழ்நாடு சூதாட்ட புதிய சட்டத்திருத்த விதிகளின் பிரிவுகளின் கீழ் ஈரோடு சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT