கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ 
Regional01

உறுதிமொழிக் குழு உறுப்பினராக - பாண்டியன் எம்எல்ஏ நியமனம் :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை யின் உறுதிமொழிக் குழு உறுப்பினராக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான கே.பழனிசாமி பரிந்துரையின் பேரில் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எம்எல்ஏ பாண்டியன் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். சட்டமன்ற பேரவை உறுதிமொழிக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட எம்எல்ஏ பாண்டியனை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT