தாளவாடியில் வாழைத்தோட்டத்தில் புகுந்த யானைக்கூட்டம் விளைபொருட்களைச் சேதப்படுத்தின.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கெட்டவாடியைச் சேர்ந்தவர் இளங்கோ (42). இவர் தனது 3 ஏக்கர் நிலத்தில் கரும்பு ,வாழை சாகுபடி செய்துள்ளார். நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வந்த 8 காட்டு யானைகள், தோட்டத்துக்குள் புகுந்து கரும்பு, வாழை பயிரை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. அங்கு திரண்ட விவசாயிகள், பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். யானைகளால் 500 வாழைகள், 50 தென்னை மரங்கள், கரும்பு என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வனப்பகுதியை சுற்றி அகழி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.