Regional02

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் பெரம்பலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். லட்சத்தீவு மக்களின் உரிமைகளை பறிக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். பாதிரியார் ஸ்டேன் சாமி மறைவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் அரசமரத்தடி அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் மாவட்டத் தலை வர் வின்சென்ட், மாவட்டச் செயலாளர் ரபீக் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT