Regional01

சங்கரன்கோவில் அருகே இளைஞர் கொலை :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மலையான்குளம், அராபத் நகரில் உள்ள குளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலமாகக் கிடந்தார். அவரது தலை, கழுத்து, கையில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த குருவிகுளம் போலீஸார் அங்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

அந்த இளைஞர் அருப்புக் கோட்டை பகுதியைச் சேர்ந்தவ ராக இருக்கலாம் என்றும், ஏமாற்றி அழைத்து வரப்பட்டு, திட்டமிட்டு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். அந்த இளைஞர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT