Regional01

இளைஞர் கொலை :

செய்திப்பிரிவு

காட்டுமன்னார்கோவில் அருகே விருத்தாங்கநல்லூர் பகுதியில் உள்ள வீராணம் ஏரியில் நேற்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் புத்தூர் போலீஸாருக்கு தகவல் தந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற புத்தூர் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எரிந்து கிடந்த இளைஞர் யார்.எந்த ஊரை சேர்ந்தவர். அவரை கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT