அரியலூர் மாவட்டம் செந் துறையை அடுத்த சிறுகடம்பூர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோகிலா. இவர் களுக்கு வசந்த்(7), கபிலன்(5) என 2 மகன்கள்.
இந்நிலையில், வசந்த், கபிலன் ஆகிய இருவரும் தங்கள் கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று மாலை குளித்தபோது நீரில் மூழ்கினர். அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்ட போது, வசந்த் உயிரிழந்தார். கபிலன் ஆபத்தான நிலையில் குமிழியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.