ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், தி.மலை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் நேற்று திறக்கப்பட்டன.
கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் 2 மாதங்களுக்குப் பிறகு, ஜுலை 5-ம் தேதி (நேற்று) முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய வும், வழிபாடு செய்யவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.
அதன்படி, தி.மலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி வழங்கப்பட்டது.
முகக்கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக் கப்பட்டனர். தனி மனித இடை வெளியுடன் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், செய்யாறு வேதபுரீஸ்வரர், படைவீடு ரேணுகாம்பாள் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களும் திறக் கப்பட்டதால் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோல், தேவாலயங்கள் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடும் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டு சிறப்பு தொழுகையும் நேற்று நடைபெற்றது.
வேலூர்
ராணிப்பேட்டை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்திலும், திருப்பத்தூர் நகரிலும் உள்ள அனைத்து கோயில்களும் நேற்று அதிகாலை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், கிறிஸ்தவ தேவாலயங்கள், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் நேற்று திறக்கப்பட்டு சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
உணவகங்களில் அமர அனுமதி