பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர். அடுத்த படம்: திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர். 
Regional01

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் : ராணிப்பேட்டையில் எல்.கே.சுதீஷ் பங்கேற்பு

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக வேலூரில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேமுதிக மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்தார்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிராக மத்திய, மாநில அரசு களைக் கண்டித்து, தேமுதிக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் ஏ.கே.கோபிநாத் தலைமை தாங்கினார். வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர் பிரதாப் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கேப்டன் மன்ற மாநில துணை செயலாளர் ராஜா சந்திரசேகர் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளர் தர், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் புருஷோத்தமன், மாவட்டப் பொருளாளர் ஜே.சி.பி சுரேஷ், மகளிர் அணி செயலாளர் மகா லட்சுமி, மாவட்ட துணைச் செயலாளர் ஜமுனாராணி உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய, மாநில அரசு களை கண்டித்து முழக்கமிட்டனர்.

ராணிப்பேட்டை

பின்னர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜை சந்தித்த மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு தொடர்பான கோரிக்கை மனுவையும் அளித்தார்.

திருப்பத்தூர்

SCROLL FOR NEXT