Regional01

17 தபால் நிலையங்களில் ஆதார் சேவை வசதி :

செய்திப்பிரிவு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அணைக்கட்டு, சோழவரம், சிஎம்சி மருத்துவமனை, காந்திநகர், குருவராஜபாளையம், கணியம்பாடி, காட்பாடி, லத்தேரி, ஒடுக்கத்தூர், சத்துவாச்சாரி, தொரப்பாடி, ஊசூர், வடுகன்தாங்கல், விரிஞ்சிபுரம், வேலூர் கோட்டை, சைதாப்பேட்டை மற்றும் வேலூர் தலைமை அஞ்சலகம் என 17 தபால் நிலையங்களில் கரோனா இரண்டாம் அலை காரணமாக ஆதார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது, அரசு அறிவித்துள்ள தளர்வுகள் காரணமாக கடந்த மாதம் 23-ம் தேதி முதல் ஆதார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT