சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நேற்று 245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில், சேலம் மாநகராட்சிப்பகுதியில் 73 பேரும், வட்டார அளவில் ஓமலூரில் 20, எடப்பாடியில் 19, கொங்கணாபுரத்தில் 14, தாரமங்கலத்தில் 10, மேச்சேரியில் 9, கொளத்தூர், சங்ககிரி மற்றும் மேட்டூர் (நகராட்சி) தலா 8, காடையாம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசலில் தலா 6 பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் 13 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.