கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டேக்வாண்டோ பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஐயப்பன் எம்எல்ஏ சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 
Regional02

கடலூரில் - டேக்வாண்டோ மாணவர்களுக்கு ஐயப்பன் எம்எல்ஏ பாராட்டு :

செய்திப்பிரிவு

கடலூரில் டேக்வாண்டோ மாணவர்களுக்கு ஐயப்பன் எம்எல்ஏ பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

கடலூர் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச் யில் ஐயப்பன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 7 ஆண்டுகள் பயிற்சி பெற்ற மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய டேக்வாண்டோ மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் பேசுகையில், "மாணவர்களின் கல்வியோடு தற்காப்பு கலையும் அவசியம். மன வலிமையும், உறுதியும் அளிக்கும் தற்காப்புக்கலை அவர்களது வாழ்க்கை நெறிமுறைகளை திறம்பட கொண்டு செல்ல வழிகாட்டும் "எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கடலூர் நகர திமுக செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், டேக்வாண்டோ பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண் டனர்.

SCROLL FOR NEXT