அருப்புக்கோட்டையில் அர்ச்சகர் உள்ளிட்டோருக்கு கரோனா நிவாரண நிதி மற்றும் பொருட்களை வழங்கிய அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு. 
Regional02

அருப்புக்கோட்டை கோயில்களில் ஊதியமின்றி பணிபுரியும் - அர்ச்சகர்கள் 75 பேருக்கு நிவாரண நிதி :

செய்திப்பிரிவு

கோயில்களில் ஊதியமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தமிழக அரசின் கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சொக்க நாத சுவாமி கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் உதவித் தொகையாக 75 பேருக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் தலா ரூ.4 ஆயிரம் நிதி 10 கிலோ அரிசி உட்பட 15 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்தி ரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நிதி உதவியை வழங்கினர்.

அதைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில், வாழும் கலை அமைப்பு மற்றும் இண்டர்நேஷனல் அசோசி யேசன் ஆப் ஹியூமன் வேல்யூஸ் நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட 5 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட 3 ஆக்சிஜன் செரிவூட்டிகளை அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

SCROLL FOR NEXT