ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மேலும் 31 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ.101.01-க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நேற்று முன்தினம் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.31-க்கு விற்பனையானது. இது நேற்று மேலும் 18 பைசா உயர்ந்து ரூ.94.49-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.