தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி- பெரியதாழை இடையே புதிய நகர பேருந்து சேவையை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
உடன்குடி- பெரியதாழை இடையே பேருந்து சேவை தொடங்க வேண்டும் என, அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து திருச்செந்தூர் பணிமனையில் இருந்து உடன்குடி- பெரியதாழை இடையே காலை முதல் இரவு வரை இயங்கும் வகையில் புதிய நகர பேருந்து வழித்தடம் உருவாக்கப்பட்டது. புதிய பேருந்து சேவை தொடக்க விழா உடன்குடி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேருந்து சேவையை தொடங்கி வைத்து, அதில் பயணித்தார்.
இதேபோல பெரியதாழை- உடன்குடி இடையேயான முதலாவது நகர பேருந்து சேவையை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்து, சிறிது தூரம் பேருந்தில் பயணித்தார். பெரியதாழையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குத்தந்தை சுசீலன், ஊர் கமிட்டி தலைவர் ஜான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.