Regional02

ஏரியில் மீன்பிடிக்க மோதல்; இருசக்கர வாகனங்கள் எரிப்பு :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் தமிழக நீர் வள ஆதாரத் துறைக்கு சொந்தமான பெரிய ஏரியில் நேற்று மீன்பிடி திருவிழா நடத்த அரும்பாவூர் பொதுமக்கள் முடிவு செய்து, அறிவிப்பு வெளியிட்டனர்.

தொடர்ந்து, நேற்று காலை மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரிய ஏரிக் கரையில் கூடினர். அப்போது, அங்கு வந்த அப்பகுதி மீனவர் சங்கத்தினர், பெரிய ஏரியில் மீன்பிடிக்க தாங்கள் குத்தகை எடுத்துள்ளதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில், அங்கிருந்த 5 இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT