Regional01

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் - 9 இடங்களில் மக்கள் நீதிமன்றம் ஜூலை 10-ம் தேதி நடக்கிறது :

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் ஜூலை 2-வது சனிக்கிழமை உச்ச நீதிமன்றம் முதல் தாலுகா நீதிமன்றங்கள் வரை தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்த தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், வள்ளியூர், நாங்குநேரி, தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, ஆலங்குளம், சங்கரன்கோவில் நீதிமன்றங்களில் வரும் 10-ம் தேதி சட்டப்பணிகள் ஆணைக் குழுக்களால் 11 அமர்வுகள் அமைக்கப்பட்டு, மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.

இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக் கூடிய குற்ற வழக்குகள் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. எனவே, பொதுமக்கள் இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தால் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் மூலம் மக்கள் நீதிமன்றத்துக்கு மாற்றி தீர்வு காணலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதியுமான நசீர் அகமது, செயலாளரும், சார்பு நீதிபதியுமான வஷீத்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT