Regional01

சேலம் மாவட்டத்தில் 251 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் நேற்று 251 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் நேற்று கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில், சேலம் மாநகராட்சி பகுதியில் 36 பேரும், வட்டார அளவில் மேச்சேரியில் 18, வீரபாண்டியில் 12, எடப்பாடி, நங்கவள்ளி, ஓமலூரில் தலா 10, ஆத்தூர், தாரமங்கலத்தில் தலா 9, கொளத்தூர், மேட்டூர் நகராட்சியில் தலா 7, தலைவாசல், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம், சேலத்தில் தலா 4, சங்ககிரி 3, காடையாம்பட்டி, கொங்கணாபுரத்தில் தலா 2, கெங்கவல்லி, நரசிங்கபுரத்தில் தலா 1, பிற மாவட்டங்களில் இருந்து வந்த 90 பேர் உட்பட மாவட் டம் முழுவதும் மொத்தம் 251 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட அனைவரும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டனர்.

SCROLL FOR NEXT