சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலம் நெய்வேலி பழுப்பு நிலக்கரிநிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டு ள்ளது. அதன் அடிப்படையில் சுரங்கவியல் பட்டய படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்படிப்பை நடப்பு கல்வியாண்டில் தொடங்க ஏஐசிடிஇ (AICTE) அனுமதி அளித்துள்ளது. இப்பட்டய படிப்பிற்கான கட்டிடங்கள், ஆய்வு கூடங்கள், உபகரணங்கள் மற்றும் பிற வசதிகளை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் செய்து கொடுத்துள்ளது. ஒவ்வொரு கல்வியாண்டிலும் 60 மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள். அதில் 30 மாணவர்கள் நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்தால் பரிந்துரைக்கப் படுவார்கள். மீதமுள்ள 30 இடங்களுக்கான சேர்க்கை, பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி ஒற்றை சாளர முறையில் மேற்கொள்ளப்படும்.