Regional02

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.86 ஆயிரம் திருட்டு :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேல குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா(35). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு வங்கியில் தனது நகைகளை நேற்று முன்தினம் அடமானம் வைத்து ரூ.86,000 பணம் பெற்றார். அந்தப் பணத்தை இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துவிட்டு, அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT