மகளிர் விடுதிகள், முதியோர் இல்லங்கள் வரும் 31-ம் தேதிக்குள் உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
31-ம் தேதிக்குள் பதிவு செய்தல்
மகளிர் விடுதிகள் நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டுநிறுவனங்கள், தங்கள் விடுதிகளை தமிழ்நாடு மகளிர் மற்றும்குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தின்படி விடுதிகள் நடத்துபவர்கள் ஜூலை 31-க்குள் உரிமம் பெற்று கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், சமூகநலத் துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி இந்த விடுதிகளைபராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த அறிவுரைகளை பின்பற்றத் தவறுபவர்கள் மீது சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும்மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.