திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை அருகே ஏபிடி சாலையில் கடந்த 2-ம் தேதி, எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த சம்சுதீன்(25) கொல்லப்பட்டு கிடந்தார். முன் விரோதம், பணம் கொடுக்கல் பிரச்சினை தொடர்பாக நடந்த இந்த கொலை தொடர்பாக, தெற்கு தோட்டத்தை சேர்ந்த ஆதித்யா உட்பட 5 பேரை மத்திய போலீஸார் கைது செய்தனர்.
ஆதித்யாவின் அண்ணன் ஜீவா காலனியை சேர்ந்த அரவிந்த்(28) வேலை முடிந்து நேற்று முன் தினம் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கொல்லப்பட்ட சம்சுதீனின் நண்பர்கள் மோகன் உட்பட நால்வர், அரவிந்தை வழிமறித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அரவிந்தின் காதில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அரவிந்த் சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய போலீஸார் வழக்கு பதிந்து மோகன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.