Regional01

நாய் குறுக்கே வந்ததால் விபத்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் மரணம் :

செய்திப்பிரிவு

தேனி அருகே முத்துதேவன்பட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் ஜீவன் (18). இவர் கோடாங்கி பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். போடேந்திரபுரம் அருகே சென்ற போது நாய் குறுக்கே ஓடியது.

இதனால் திடீர் பிரேக் போ ட்டதில் தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயத்துடன் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் மதனகலா விசாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT