Regional01

பெண்ணை ஆபாசமாக சித்திரித்து வீடியோ வெளியிட்டவர் கைது :

செய்திப்பிரிவு

தேனி அல்லி நகரம் வெங்கலா கோயில் தெருவைச் சேர்ந்த விஜயன் மகள் கவிதா (32). இவர் கடந்த மாதம் 21-ம் தேதி தேனி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

அதில் செல்வக்குமார் என்ற மதுரை செல்வா (45). யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது வீடியோ, புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து பதிவேற்றம் செய்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

ஆய்வாளர் வெங்கட்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து மதுரை செல்வாவை தேடி வந்தனர். இந்நிலையில் கோயம்புத்தூர் கிராஸ்கட்ரோடு 7-வது தெருவில் உள்ள மேன்சனில் பதுங்கியிருந்த செல்வாவை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பெண்களை ஆபாசமாக சித்திரித்தல், பணம் பறித்தல், ஆபாச படங்களை வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து

தேனி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT