திண்டுக்கல் அருகே சென்னம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை அருந்ததி (55). இவரது கணவர் பழனி (57), ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்பக்கக் கதவை காற்றுக்காக திறந்து வைத்து தூங்கினர். அப்போது முகமூடி அணிந்த மர்மநபர்கள் வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பினர். தாடிக்கொம்பு போலீஸார் விசாரிக்கின்றனர்.