Regional02

ஈரோட்டில் இன்று 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் 113 தடுப்பூசி மையங்களில் இன்று (3-ம் தேதி) 15 ஆயிரத்து 710 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது சுழற்சி முறையில் தடுப்பூசி போடப்படுகிறது. இதன்படி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளை மூன்றாகப் பிரித்து தடுப்பூசி போடப்படுகிறது. அதேபோல் 14 ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளும் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்நாள் தடுப்பூசி போடும் வார்டு மற்றும் ஒன்றியப்பகுதிகளில், 113 இடங்களில் இன்று (3-ம் தேதி) 15 ஆயிரத்து 710 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மாநகராட்சி மையங்களில் தலா 200 பேருக்கும், ஒன்றிய மையங்களில் தலா 120 பேருக்கும் தடுப்பூசி போடப்படவுள்ளது.

இதனிடையே, ஈரோடு மாவட்டத்தில் நேற்று 395பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 203 பேர் குணமடைந் துள்ள நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட அளவில் 4123 பேர் தற்போது கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT