புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளிடமி ருந்து செப்டம்பர் மாதம் வரை தலா 550 டன் அரைவை கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிலோ ரூ.103.35 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
கொப்பரையின் தரம் குறித்து மத்திய அரசின் கொள்முதல் நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.