Regional01

காட்டுவாரியில் இறங்கி மக்கள் போராட்டம் :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள செங்காடு கிராமத் துக்கு பாதிரிபட்டி- தோகைமலை பிரதான சாலையில் இருந்து மண் சாலை செல்கிறது. காரைக் குளம், திருமாணிக்கம்பட்டி குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கல்லடை குளத்துக்குச் செல்லும் காட்டுவாரி இந்த மண் சாலையின் குறுக்கே செல்கிறது. மழைக் காலங்களில் இந்த காட்டுவாரியில் தண்ணீர் செல் லும்போது, 10 கி.மீ தொலைவு சுற்றித்தான் செங்காடு கிராமத் துக்குச் செல்ல வேண்டும். இந்த காட்டுவாரியில் ரூ.30 லட்சத்தில் புதிய பாலம் அமைக்க உத்தர விடப்பட்டும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த காட்டு வாரியில் அண்மையில் தடுப் பணை அமைக்கப்பட்டுள்ளதால், 5 அடி ஆழத்துக்கு மழைநீர் தேங்கி, காட்டுவாரியை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவ திப் படுகின்றனர். இதையடுத்து, பாலம் அமைக்க வலியுறுத்தி காட்டுவாரி தண்ணீரில் இறங்கி செங்காடு மக்கள் நேற்று போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், தோகைமலை ஒன் றிய ஆணையர் ராஜேந்திரன் ஆகி யோர் சமாதானம் செய்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT